"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Aug 27, 2025, 06:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவினருக்கு தொடர்பு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jul 14, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரணடைந்தவரை அதிகாலையில் என்கவுன்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்த விவகாரத்தில் திமுக உண்மையை மூடி மறைக்கிறது” என குற்றம் சாட்டினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய  அண்ணாமலை,

கடந்த 2019 ம் ஆண்டு சிறு குறு விவசாயிகள் நலனுக்காக பி எம் கிசான் திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார். தமிழகத்தில் அதிகபட்சமாக 43 லட்சம் விவசாயிகள் வரை அந்தத் திட்டத்தில் பயன்பெற பதிவு செய்தனர். இதுவரை 17 தவணை ரூ 2,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது படிப்படியாக குறைந்து இந்தத் திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர். இதில் ஏழு லட்சம் போலி விவசாயிகள் இணைக்கப்பட்டு ஊழல் நடந்தது.

தமிழகத்தில் உள்ள திமுக அரசிடம், இது எப்படி என்று கேள்வி எழுப்பி இருக்கிறோம். எதற்காக 23 லட்சம் பேரை நீக்கினீர்கள். அதிகாரிகள் போலியாக சேர்த்து இருந்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர்களும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தி இதனை சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் திருச்சியை மையமாகக் கொண்டு, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் போராட்டம் நடத்தப்படும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ள தமிழக அரசு தொடர்ந்து உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறது. கொலை சம்பவத்தில் உள்ள மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்கு போலீசாரோ தமிழக அரசோ வாய் திறக்கவில்லை.

தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை அதை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 26ம் தேதி போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகு, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் ஒரு சுற்று கூட பாக்கி இல்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது.

மேகதாதுவில் அணை கட்டுவதாக பிரச்சனை கிளம்பிய பிறகுதான் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். காவிரி தண்ணீர் கிடைக்காமல் கடந்த ஆண்டு தமிழகத்தில் குறுவை சாகுபடி உட்பட அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரியான விளைச்சல் இல்லாததால் மத்திய உணவு கழகம் அரிசி கொள்முதலை குறைத்துள்ளதுபிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது.

தற்போது கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. எனவே விவசாய சங்கத்தினர்அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் பங்கேற்கும். இதன் மூலமாக தமிழக முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து, இங்கிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதை அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அனைத்து மாநில ஐஏஎஸ் அதிகாரிகளும் துறை சார்ந்த அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.சமீப காலமாக மேலாண்மை ஆணையத்தில் நடைபெறும் கூட்டங்களை தமிழக அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை.

356 சட்டத்தை எந்த மாநில அரசாங்கத்தின் மீதும் பாரதியார் ஜனதா கட்சி அரசு பயன்படுத்தவில்லை. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு விதண்டாவாதமாக பேசி, நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண விடாமல் செய்து கொண்டிருக்கிறது. அதேசமயம் தமிழக அரசோ முதல்வரோ காங்கிரஸ் எம்பி எம்எல்ஏக்களோ கர்நாடகாவுக்கு சென்று கர்நாடகாவுக்கு சென்று முதல்வர்   சித்தராமையாவை சந்தித்து பேசவில்லை.

தமிழக அரசு தரப்பில் பேசி இருந்தால் கர்நாடக முதல்வர் ஏற்பதையும் ஏற்காததையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறலாம். அடிப்படை முயற்சிகளையும் செய்யாமல், சதி நடப்பதாகவும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று கூறுவதும் எந்த விதத்தில் ஏற்புடையது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பிரச்சனைகள் இருக்கிறது. அவர்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளை சமூகமாக பேசி தீர்த்துக் கொள்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் இதனை அரசியல் ஆக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கும் கூட்டம் இப்போதும் அதை செய்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் விவசாயிகளோடு பாரதிய ஜனதா கட்சியினர் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறோம்.இதுவரை காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். எந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருந்தாலும் அதை ஜனநாயக முறைப்படி தீர்க்க வேண்டும் என்பதில் பிரதமர் தெளிவாக இருக்கிறார். இதை தமிழக அரசு புரிந்து கொள்ளாத வரை ஒன்றும் செய்ய முடியாது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பாரதிய ஜனதா கட்சி அரசியல் கொலையாக கருதுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இதை கேங்க் மர்டர் என்று பேசுகின்றனர். காவல்துறை ஒரு கோணத்தில் விளக்கம் கொடுக்கிறது. ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவர் உடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இருப்பது போன்ற ஒரு படத்தை பாரதிய ஜனதா கட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டு, திமுகவினர் பாணியிலேயே பதில் சொல்லி இருக்கிறோம். எனவே இந்த கொலை சம்பவத்தில் பெரிய மர்மம் முடிச்சு உள்ளது.

முக்கிய குற்றவாளியை என்கவுண்டர் செய்துவிட்டு அவர்தான் திட்டம் தீட்டியதாக தெரிவிப்பார்கள். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கடிதம் எழுதி இருக்கிறேன்.

அதன் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் அனுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்ற தலைவர்களே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என்று கூறியிருக்கின்றனர்.

இந்தியாவில் முதல் முறையாக இப்போது தான் என்கவுண்டர் செய்யும் பொழுது எதிராளி துப்பாக்கியால் சுட முயன்றதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். சரணடைந்தவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பதுதான் கேள்வி. கூட்டணி கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு ஒருபுறம் பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கும் போது, என் கவுண்டர் நடந்திருப்பதால் அரசு மற்றும் போலீஸ் தரப்பில் சொல்வதை உண்மை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தெளிவான விளக்கங்களை கொடுத்து விட்டால், சென்னை அரசியலின் நிலை மாறி ஜனநாயக அரசியல் வந்து விடும். ரவுடிகள் மத்தியில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் தான் இது போன்ற கொடூர கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. அதனால் போலீஸ் துறையினரும் பாதுகாப்புடன் கவனமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: "DMK's link in Armstrong murder case! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்!- 90 பேர் பலி

Next Post

90 முறை மாநில அரசுகளை காங்கிரஸ் கவிழ்த்தது! – ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டு

Related News

‘INS உதயகிரி’-‘INS ஹிம்கிரி’ உள்நாட்டிலேயே தயாரித்த போர்க்கப்பல்கள் அர்ப்பணிப்பு!

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

போக்குவரத்தில் புதிய புரட்சி : வியக்க வைக்கும் எதிர்கால தொழில்நுட்பம்!

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் டெல்லியில் தொடக்கம்!

லடாக் : ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பிக் அப் வாகனம்!

திருவண்ணாமலை : பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை உருவாக்கிய பக்தர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies