தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அட்டகாசம் செய்துவரும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சோழபுரம் பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக குரங்குகள் உலா வருகிறது. மேலும், மளிகைக் கடைகள், பழக்கடைகள், வீடுகளில் புகுந்து பொருட்களை குரங்குகள் சேதப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.