நேபாள பிரதமராக கே.பி.சர்மா ஒலி இன்று பதவியேற்கிறார்.
ஏற்கெனவே பிரதமராக இருந்த புஷ்ப கமல் தஹல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவினார்.
இதையடுத்து அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமராக கே.பி.சர்மா ஒலியை நியமித்து நேபாள அதிபர் அலுவலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், இன்று காலை 11 மணிக்கு சர்மா ஒலி நேபாள பிரதமராக பதவியேற்கவுள்ளார்.