மகாராஷ்டிராவில் சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்ணின் மகன் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து, தனது மகனை கட்டியணைத்து தாய் ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோவை இணையத்தில் பகிர்ந்து அம்மாநில அமைச்சர் ரவீந்திர சவான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை டோம்பிவிலி பகுதியில் சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்யும் பெண் மவாஷி. இவரது மகன் யோகேஷ், சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இந்த செய்தியை தனது தாயாரிடம் கூறியபோது அவர் மகிழ்ச்சி பெருக்கில் மகனை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் சிந்தினார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து, கல்வியை விட பெரிய ஆயுதம் ஏதுமில்லை என மகாராஷ்டிரா அமைச்சர் ரவீந்திர சவான் பாராட்டு தெரிவித்துள்ளார்.