கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
பண்ருட்டியில் இருந்து ஆனத்தூர் நோக்கி பாரதி, கோகுலகண்ணன், லோகேஷ் ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அம்மாப்பேட்டை சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் 3 பேரும் பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.