தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்ததன் இருபதாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் உடல் கருகி கருகி உயிரிழந்தனர்.
இந்த கோர சம்பவத்தின் இருபதாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், தீ விபத்து நிகழ்ந்த பள்ளியின் முன்பு நடைபெற்ற நிகழ்வில், குழந்தைகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பலியான குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவுச் சின்னத்திலும், அஞ்சலி செலுத்தப்பட்டது.