சென்னை ஆவடி அருகே, ஜாஃபர் சாதிக்குடன் தொடர்புடைய நபரின் வீட்டில் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக, திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர்சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.
போதைப்பொருள் விற்பனை மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக்கூறி, ஜாஃபர் சாதிக்கை அமலாக்கத்துறையினர் கடந்த 26-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த, சிறை மாற்று வாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, டெல்லி திஹார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட ஜாஃபர் சாதிக், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்த ஜோசப் ஆயிஷா என்பவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
ஜோசப் ஆயிஷாவின் வங்கிக் கணக்கிற்கு ஜாபர் சாதிக்கிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பரிவரித்தனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.