தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக வேன் உரிமையாளர் சுடுகாட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. வழக்கம் போல் பணிக்கு சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது சுடுகாட்டு அருகே கொடூரமான முறையில் வெட்டப்பட்டு மாடசாமி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில். கொலையான மாடசாமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.