முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தேர்தல் முடியும் வரை நிதியுதவியாக மாதந்தோறும் 376 கோடி ரூபாயை வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடுநிலை வகிக்க உள்ளதாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். எனினும் அவர் மறைமுகமாக டிரம்புக்கு ஆதரவாக செயல்படுவதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிறகு எலான் மஸ்க் வெளிப்படையாக டிரம்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து டிரம்புக்கு தேர்தல் முடியும் வரை நிதியுதவியாக மாதந்தோறும் 376 கோடி ரூபாயை வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.