மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் பகுதியில் புலிக்குட்டி ஒன்று ரயிலில் மோதி உயிரிழந்தது. மேலும் 2 குட்டிகள் காயமடைந்தன.
காயமடைந்த 2 குட்டிகளும் மீட்கப்பட்டு, சிறப்பு ரயில் மூலம் போபாலில் உள்ள வான் விஹாருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டன.
ரயிலில் மோதி பலியான புலிக்குட்டியை பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வனத்துறையினர் தகனம் செய்தனர்.