கர்நாடக மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல் பகுதியை சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி அடித்து செல்லப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
உத்தர கர்நாடகா மாவட்டம், ஷிரூரு அருகே ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நாமக்கலை சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி, கங்கவாலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.