திண்டுக்கல் மாவட்டம் அகரம் அருகே முன்விரோதம் காரணமாக பேக்கரி உரிமையாளரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அகரம் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிலிப்ஸ் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அருகே உள்ள கறிக்கடையில் வேலைபார்த்து வந்த அமலதாசன் என்பவருக்கும் இடையே வெகு நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் வேலையை விட்டுச் சென்ற அமலதாசன், குடிபோதையில் பேக்கரிக்குள் நுழைத்து பிலிப்ஸை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த பிலிப்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.