நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவலாஞ்சியில் பெய்த கனமழையால் லாரன்ஸ் பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்காக காத்திருந்த கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் சேதமடைந்ததால், உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.