பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 70ம் ஆண்டு தொடக்க நாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. ஜூலை 23ம் தேதி சங்கத்தின் 70ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு மாவட்டத்தின் 7 இடங்களில் கொடியேற்றி கொண்டாட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.