இந்து மதத்தை சேர்ந்த மனைவியே தனது வளர்ச்சிக்குக் காரணமென அமெரிக்க துணைஅதிபர் வேட்பாளரான ஜேம்ஸ் டேவிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ட்ரம்ப்பும், துணை அதிபர் வேட்பாளராக James David Vance என்பவரும் போட்டியிடுகின்றனர்.துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள James David Vance-ன் மனைவி உஷா சிலுகுரி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
தனது மனைவி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தனது வளர்ச்சிக்கு மனைவியே முக்கிய காரணம் என்றும், தன்னுடைய பணியிலும், ஆன்மிகப் பயணத்திலும் அவர் உறுதுணையாக இருப்பதாகவும், கூறியுள்ளார்.
தனது பெற்றோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களால் சிறந்த பெற்றோராகவும், நல்ல மனிதர்களாவும் இருக்க முடிந்ததாக உஷா சிலிகுரி தெரிவித்துள்ளார். தானும், தன் கணவரும் இருவேறு மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், குழந்தைகளை வளர்ப்பதில் தங்களிடையே பிரச்சினை இல்லை என்றும் உஷா சிலுகுரி கூளியுள்ளார்.