முஹர்ரம் திருநாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாளான, முஹர்ரம் திருநாளை அனுசரிக்கும் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் புனித நாளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.