வேலூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாங்காய் மண்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார்.
பணி மெத்தனமாக நடைபெறுவதாலேயே இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.