வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர்.
பெரிய புதூர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அளித்ததின்பேரில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து கிறிஸ்டியான் பேட்டை காப்பு காட்டில் விடுவித்தனர்.