ராமநாதபுரத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த விஷால், மீன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது மதுபோதையில் இருந்த நண்பர்கள் விஷாலை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், விஷாலின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.