புதுச்சேரியில் நடுக்கடலில் விசைப்படகு மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை மீனவ கிராமத்தை சேர்ந்த சதா என்பவர், மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், விசைப்படகு தீப்பிடித்து எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.