தென்காசி குற்றால ஐந்தருவியில் குளிக்க, இரண்டு நாட்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் காலை முதல் ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.