திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் BSNL இணைப்பு துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான பரமன்குறிச்சி, காயாமொழி, கீழநாலு மூலைக்கிணறு, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் தொலைதொடர்பு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிஎஸ்.என்.எல் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.