பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி நீலகிரி மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி உயிரிழந்த விவகாரத்தில் வாஞ்சிநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னம்பாளையம் பகுதியில் வசித்து வந்த கருணாநிதி, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிசிடிவிகளை ஆய்வு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்தியவர், நாகூர் பகுதியை சேர்ந்த வாஞ்சிமுத்து என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.