தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அவலாஞ்சியில் 33 சென்டி மீட்டரும், அப்பர் பவானியில் 21 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால், மீட்பு பணிகளை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர்.