தெலுங்கானாவில் 7 வயது சிறுவனை நாய் ஒன்று கடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மங்கிலி கிராமத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை தெருநாய் ஒன்று அவன் மீது பாய்ந்து கடித்து இழுத்து செல்ல முயன்றது. அங்கிருந்த ஒருவர் அந்த நாயை விரட்டி விட்டு சிறுவனை மீட்டுள்ளார்.
படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பி உள்ளான். ஏற்கனவே, ஹைதராபாத் ஜவகர் நகரில் நாய் கடித்து 18 மாத சிறுவன் பலியானது குறிப்பிடத்தக்கது.