மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் ஆள் சேர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அலங்காநல்லூர் அடுத்த அதலைப்பகுதியை சேர்ந்த ஜோதிபாசு, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவராக இருந்து வந்துள்ளார். இவருக்கும் ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளரான விஜயகுமார் என்பவருக்கும் இடையே சங்கத்தில் ஆள் சேர்ப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள கடை முன்பு நின்றுகொண்டிருந்த ஜோதிபாசுவிடம் விஜயகுமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜோதிபாசுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு விஜயகுமார் தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ஜோதிபாசுவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.