சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆடித் தள்ளுபடி காரணமாக பட்டுப் புடவை வாங்க பெண்கள் குவிந்தனர்.
ஆடி மாதத்தில் விஷேச நிகழ்வுகள் அதிகம் நடைபெறாததால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஜவுளிக்கடைகள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் காரைக்குடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை சார்பில் திருமண மண்டபத்தில், 20 முதல் 60 சதவீதம் வரை பட்டுப் புடவைகள் தள்ளுபடியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சுற்றுப்புரத்தில் இருந்தும் குடும்பத்துடன் சென்ற பெண்கள் அதிகாலை முதலே காத்திருந்து பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்றனர்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி உள்ளிட்ட கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.