ஐ.சி.சி, ‘டி-20’ போட்டிகளில் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.
இதில் பேட்டர்கள் பிரிவில் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெஸ்வால், 743 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் 7வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.