மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோயில் குளத்திலிருந்து 350 கிலோ எடை கொண்ட சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோனேரிராஜபுரம் கிராமத்தில் உமாமகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள குளத்தில் மூன்றடி உயரமும் 350 கிலோ எடையும் கொண்ட சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையறிந்து அங்கு சென்ற தொல்லியல் துறையினர் சிலையை மீட்டு ஐம்பொன் சிலையா என ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர்.