வேலூர் மாவட்டம் காமாட்சியம்மன் பேட்டை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திரௌபதி அம்மன் கோயில் திருவிழா கடந்த 3 நாட்களுக்கு முன்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் போரில் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.