திண்டுக்கல்லில் மாநில அளவிலான சுழற்பந்து போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு சுழற்பந்து கழகம் மற்றும் திண்டுக்கல் சுழற்பந்து கழகம் இணைந்து நடத்திய இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 38 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் அணியை திண்டுக்கல் அணி வீழ்த்தியது. இதனையடுத்து வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்த அணியினருக்கு ரொக்கம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.