ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலில் இருந்து மாயமான இந்தியர்களில் 8 பேரை, இந்தியக் கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் மீட்டுள்ளது.
கடந்த 15-ம் தேதி துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில், 25 கடல் மைல் தொலைவில் அந்த கப்பல் கவிழ்ந்தது.
அந்த கப்பலில், 13 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த மூவரும் பணியாற்றிய நிலையில், 8 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 5 இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.