மத்திய சாலைப் போக்குவரத்து நிதின் கட்கரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள நிதின் கட்கரி, பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொண்டதாக, நிதின் கட்கரி தெரிவித்தார்.