கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வீட்டு மதில் சுவர் மற்றும் தென்னை மரங்கள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டன.
இதனையறிந்து அங்கு சென்ற நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பாதிப்புகளை ஆய்வு பார்வையிட்டார். பின்னர் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.