புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் ரவுடிகள் அறையில் இருந்து செல்போன் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
காலாப்பட்டு பகுதியில் உள்ள இந்த சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் செல்ஃபோன்கள் பயன்பாட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அறையிலிருந்து செல்ஃபோன், 5 பேட்டரிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தின் வருகின்றனர்.