உதகை – கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மரம் ஒன்று விழுந்ததால் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், கூடலூர், பந்தலூர், அவலாஞ்சி, குந்தா மற்றும் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் உள்ளது. இந்நிலையில், சூட்டிங் மட்டம் அருகே சாலையில் ராட்சத மரம் ஒன்று விழுந்ததால் மூன்று மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.