நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் பேசும்போது யாரும் குறுக்கிட்டு இடையூறு ஏற்படுத்த கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.
ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மேற்கொண்டார்.
அப்போது ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் கடமைப்பட்டிருப்பதால், ஓர் உறுப்பினர் எழுந்து பேசும்போது யாரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் உரைக்கு இரு அவைகளிலும் உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தியதை குறிப்பிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.