நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதையொட்டி, பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார். வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு, தொழில் துறையினரை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.