மத்திய அரசின் சிறப்பான பொருளாதார செயல்பாடுகளால் இந்திய குடும்பங்கள் பண கஷ்டத்தை எதிர்கொள்ளவில்லை என தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும், இந்திய குடும்பங்கள் பண கஷ்டத்தை எதிர்கொள்ளவில்லை என்று கூறிய அவர், மக்கள் தங்களது சேமிப்பை முதலீடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
பருவமழையால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் நிலவினாலும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறினார்.