பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருவேங்கடம் என்பவரை என்கவுன்டர் செய்த போலீசார், 15 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் புதிய தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவரையும், அக்கட்சியின் தேசிய தலைமை நியமனம் செய்துள்ளது.