ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பீகார், அஸ்ஸாம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ், 25 ஆயிரம் கிராமங்களில் அனைத்து காலநிலையையும் தாங்கக் கூடிய சாலைகள் கட்டமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு 11 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும், நிலச்சரிவு மற்றும் மேகவெடிப்பால் பாதிக்கப்படும் உத்தரகண்ட் மாநிலத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.