வடகிழக்கு மாநிலங்களில் 100 இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தன.
நாடு முழுவதும் 8 கோடி பேர் இந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கின்றனர். இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
அந்த வகையில், அங்கு நூறு போஸ்ட் பேமென்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.