முதலீட்டைப் பெருக்கவே நீண்டகால முதலீட்டு ஆதாயத்தின் மீதான வரிவீதம் 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், டெல்லியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
அப்போது பேசியவர், முதலீட்டு ஆதாயத்துக்காக வரிவிதிப்பை எளிமைப்படுத்த மத்திய அரசு விரும்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் குறித்து கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலம் அல்லது அரங்குகளைத் திறம்பட பயன்படுத்தும் நோக்கிலேயே அவற்றை விற்பனை செய்ததாகவும், இதை சொத்து விற்பனை என்று கருத இயலாது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.