மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
மத்திய பட்ஜெட்டில் பங்கு பரிவர்த்தனை வரி உயர்த்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதையடுத்து, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் கடுமையான சரிவை சந்தித்தது. அதன்படி 1,266 புள்ளி 17 புள்ளிகள் சரிந்து 79,235 புள்ளி 91 ஆக வர்த்தகம் ஆனது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிப்டியும் 435 புள்ளி 05 புள்ளிகள் சரிந்து 24,074 புள்ளி 20 ஆக வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.