ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தாய்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.