திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொலை குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் அரசியல் பிரமுகர்களின் கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனையடுத்து மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகி வசீம் அக்ரமின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருந்ததாக அப்துல் ரகுமான், தஸ்தகீர் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.