மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 வது முறையாக பதவி வகித்து வரும் பாஜக எம்.பி. ஓம் பிர்லாவின் இளைய மகள் அஞ்சலி, தன் மீதான அவதூறு கருத்துக்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அஞ்சலி மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ். ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தன் மீதான அவதூறு கருத்துக்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி வழக்கு தொடர்ந்துள்ளார்.