முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.