தங்கம் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து விற்பனையானது.
அந்தவகையில் ஒரு சவரன் 52 ஆயிரத்து 400-ரூபாய்க்கும், கிராமுக்கு 275 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6 ஆயிரத்து 550-க்கும் விற்பனையாகிறது.
இதே போலவே வெள்ளியும் கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 92 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 3 ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து பார் வெள்ளி 92 ஆயிரத்து 500-ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.