ஆந்திர மாநிலம், அனந்தபூரில் நாகப்பாம்பை துன்புறுத்திய நபரை பாம்பு கடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கதிரி அரசு கல்லூரி வளாகத்துக்குள் நாகப்பாம்பு ஒன்று சென்றது. இதைக்கண்ட நபர் ஒருவர் மதுபோதையில் பாம்பை பிடித்து துன்புறுத்தினார்.
பலரும் எச்சரித்த நிலையில் அவர் பாம்பை காலால் மிதித்து தொல்லை கொடுத்தார். அப்போது அவரை பாம்பு கடித்த நிலையில் உடனே அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.